🔔 NEW 📚 Welcome to Kalvi Mini – Your Complete Study Materials Portal for 6th to 12th Standard!   |   📝 Important Questions, Model Papers, Previous Year Questions Available!   |   🎯 Samacheer Kalvi Study Materials – Tamil & English Medium   |   🏆 Download Free PDFs for all Subjects!   |   ⭐ Share with your friends and help them study better!

10th Tamil Quarterly Exam 2026–2027 Important Questions with Answers PDF Download | Samacheer Kalvi

10th Standard Tamil Quarterly Examination 2026–2027 Important Questions with Answers | இயல் 1


10th Tamil Quarterly Exam 2026–2027 Important Questions with Answers PDF Download | Samacheer Kalvi
10th Tamil Quarterly Exam 2026–2027 Important Questions with Answers PDF Download | Samacheer Kalvi



10th Standard Tamil – Quarterly Examination 2026

இயல் 1 – முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்

பலவுள் தெரிக (சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக)

வினா: காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர் எது?

விடை: இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது.

வினா: 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -

விடை: சருகும் சண்டும்.

வினா: 'எந்தமிழ்நா' என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -

விடை: எம் + தமிழ் + நா.

வினா: 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - இத்தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -

விடை: பாடல்; கேட்டவர்.

வினா: வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை -

விடை: மணிவகை.

குறுவினா

வினா: "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

விடை:

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை

வினா: 'பனைக்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

விடை:

  • தொடர்மொழி: பனை + கை = பனை போன்ற கை.
  • பொதுமொழி: பனைக்கை = யானையின் தும்பிக்கை.

வினா: சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை: செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை, கார்.

சிறுவினா

வினா: தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

விடை:

  • பழம்பெருமையும், தனக்கெனத் தனிச்சிறப்பும், இலக்கிய வளமும் கொண்டவள் தமிழன்னையாவாள்.
  • வியக்கத்தக்க தமிழின் நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் தமிழினைப் பற்றி உரைத்த புகழுரையும் பற்றுணர்வை எழுப்புகின்றன.
  • வண்டானது செந்தாமரைத் தேனைப் பருகிச் சிறகசைத்துப் பாடுவது போன்று, நாங்கள் தமிழைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகிறோம்.

வினா: 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' - இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

விடை:

  • அறிந்தது – அறிதல்
  • அறியாதது – அறியாமை
  • புரிந்தது – புரிதல்
  • புரியாதது – புரியாமை
  • தெரிந்தது – தெரிதல்
  • தெரியாதது – தெரியாமை
  • பிறந்தது – பிறத்தல்
  • பிறவாதது – பிறவாமை
நெடுவினா

வினா: நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.

விடை:

  • ஒரு நாட்டின் வளத்தை அங்கே வழங்கும் சொற்களின் வளமே உறுதிப்படுத்தும்.
  • தமிழ்நாட்டின் நெல் வகைகளில் செந்நெல், வெண்ணெல், கார்நெல் எனப் பல வகைகள் இருப்பதுடன், சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, சீரகச்சம்பா என அறுபது உள்வகைகள் உள்ளன.
  • இதுபோன்று வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறு கூலங்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறெங்கும் விளைவதில்லை.

வினா: காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

விடை:

  • கவிஞன் என்பவன் ஒரு காலக்கணிதம். அவன் கருவில் உருவாகும் பொருளைத் தனது சொல்லால் உருப்படியாக்கிக் காட்டுவான்.
  • புவியில் கவிஞனே புகழுடைய தெய்வம்; அவனது செல்வம் பொன்னை விட விலைமதிப்பற்றது.
  • இகழ்ந்தால் அவன் மனம் இறந்து விடாது; புகழ்ந்தால் அவனது உடல் புல்லரிக்காது.
  • மாற்றம் என்பது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவத்தை உணர்ந்து கவிஞன் செயல்படுவான்.
இலக்கணப் பகுதி

வினா: தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

விடை:

தொழிற்பெயர்:

  • வினை, பெயர் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும்.
  • காலம் காட்டாது.
  • படர்க்கைக்கே உரியது.
  • சான்று: பாடுதல், படித்தல்.

வினையாலணையும் பெயர்:

  • தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்.
  • காலம் காட்டும்.
  • மூவிடத்திற்கும் உரியது.
  • சான்று: பாடியவள், படித்தவர்.

வினா: பகுபத உறுப்பிலக்கணம் தருக: தணிந்தது.

விடை:

தணிந்தது = தணி + த்(ந்) + த் + அ + து

  • தணி – பகுதி
  • த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
  • த் – இறந்தகால இடைநிலை
  • – சாரியை
  • து – படர்க்கை வினைமுற்று விகுதி

📘 இயல் 2 – முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்

இயல் 2 – முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்
பலவுள் தெரிக (சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக)

வினா: பரிபாடல் அடியில் ‘விசும்பில், இசையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

விடை: ஈ) வானத்தையும் பேரொலியையும்

வினா: 1. ஒவ்வோர் ஆண்டும் சூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
2. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
3. இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

விடை: ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

வினா: பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு
ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு
ஈ) தென்றல் - 4. வடக்கு

விடை: ஆ) 3, 1, 4, 2

வினா: ‘மகிழுந்து வருமா?’ என்பது -

விடை: ஆ) எழுவாய்த்தொடர்

வினா: அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

விடை: அ) வேற்றுமை உருபு

குறுவினா

வினா: 'நமக்கு உயிர் காற்று, காற்றுக்கு வரம் மரம் - மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

விடை:

  • காற்றைத் தூய்மையாக்குவோம்; கண்ணியமான வாழ்வு பெறுவோம்.
  • மரங்களை வளர்ப்போம்; மழையைப் பெறுவோம்.

வினா: ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக, ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

விடை: சிரித்துச் சிரித்துப் பேசினார்.

வினா: 'கட்டுரை படித்த' - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.

விடை: கட்டுரையைப் படித்த (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு).

வினா: தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயரிட்டுள்ளனர்?

விடை:

  • கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல்.
  • மேற்கிலிருந்து வீசும் காற்று - கோடை.
  • வடக்கிலிருந்து வீசும் காற்று - வாடை.
  • தெற்கிலிருந்து வீசும் காற்று - தென்றல்.
சிறுவினா

வினா: ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசும் சூழலில் நீங்கள் சூட்டும் நான்கு தலைப்புகளை எழுதுக.

விடை:

  • உயிராக நான்.
  • பல பெயர்களில் நான்.
  • நான்கு நிலைகளில் நான்.
  • இலக்கியத்தில் நான்.

வினா: உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைத் குறிப்பிடுக.

விடை:

  • நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது.
  • பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது.
  • அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
நெடுவினா

வினா: காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

விடை:

  • குப்பை மேலாண்மையை மேற்கொள்ளுதல்.
  • பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தருதல்.
  • மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளை மிகுதியாகப் பயன்படுத்துதல்.
  • கச்சா எண்ணெய், நிலக்கரி முதலிய புதைபடிவ எரிபொருள்களைத் தவிர்த்தல்.
  • வீட்டுச் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்துவதைக் கைவிடுதல்.
இலக்கணப் பகுதி

வினா: தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை: தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.

  • எழுவாய்த்தொடர்
  • விளித்தொடர்
  • வினைமுற்றுத்தொடர்
  • பெயரெச்சத்தொடர்
  • வினையெச்சத்தொடர்
  • வேற்றுமைத்தொடர்
  • இடைச்சொற்றொடர்
  • உரிச்சொற்றொடர்
  • அடுக்குத்தொடர்

வினா: விளித்தொடர் என்றால் என்ன? சான்று தருக.

விடை: விளியைத் தொடர்ந்து வினை அமைவது விளித்தொடர் ஆகும்.

சான்று: நண்பா எழுது!

வினா: அடுக்குத்தொடர் - விளக்குக.

விடை: ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத்தொடர் ஆகும்.

சான்று: வருக! வருக! வருக!

UNIT – 3

இயல் 3 – முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்

பலவுள் தெரிக (சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக)

வினா: பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

விடை: இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

வினா: காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது.

விடை: ஆ) கிண்கிணி.

வினா: காசிக்காண்டம் என்பது -

விடை: இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்.

வினா: 'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை -

விடை: ஆ) இன்மையிலும் விருந்து.

வினா: நன்மொழி என்பது -

விடை: அ) பண்புத்தொகை.

கோடிட்ட இடங்களை நிரப்புக

வினா: விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை _______.

விடை: கரு.

வினா: கல் சிலை ஆகுமெனில், நெல் _______ ஆகும்.

விடை: சோறு.

வினா: குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _______.

விடை: எழுத்து.

வினா: 'விருந்தே புதுமை' என்று கூறியவர் _______.

விடை: தொல்காப்பியர்.

பொருத்துக

வினா:

  1. உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்.
  2. ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது.
  3. ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்.

விடை:

  1. உயிரினும் ஓம்பப் படும்.
  2. நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று.
  3. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
குறுவினா

வினா: விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

விடை:

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்.
  • 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல்.
  • அவர் எதிரில் நிற்றல்.
  • அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல்.
  • அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல்.
  • அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல்.
  • அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

வினா: 'நச்சப் படாதவன்' செல்வம் - இதொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

விடை: பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.

வினா: செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

விடை: கிண்கிணி, சிலம்பு, அரைஞாண் மணி, அரைவடம், சுட்டி, குண்டலம், குழை, உச்சி கொண்டை (முத்துகளோடு).

வினா: ‘தண்ணீர் குடி’, ‘தயிர்க்குடம்’ ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

விடை:

  • தண்ணீர் குடிஇரண்டாம் வேற்றுமைத் தொகை (தண்ணீரைத் குடி).
  • தயிர்க்குடம்இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை (தயிரை உடைய குடம்).
சிறுவினா

வினா: ‘இன்மையிலும் விருந்தோம்பல்’ குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

விடை:

  • வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்று புறநானூறு காட்சிப்படுத்துகிறது.

வினா: ‘தனித்து உண்ணாரைமை’ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. விளக்குக.

விடை:

  • தனித்து உண்ணாரைமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
  • அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பார் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதைப் புறநானூறு குறிப்பிடுகிறது.
நெடுவினா

வினா: சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

விடை:

  • தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்தல் விருந்தோம்பலாகும்.
  • 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
  • நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு தமிழருக்கு உண்டு என்பதை ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ என்று நற்றிணை குறிப்பிடுகிறது.
  • வறிய நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்த செய்தி புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
  • வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். அவர்களை வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற தேர்க்கால் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.
இலக்கணப் பகுதி

வினா: தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை: தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்.

  • வேற்றுமைத்தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை

வினா: வினைத்தொகை - விளக்குக.

விடை: காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை அடுத்துப் பெயர்ச்சொல்லோடு தொடர்வது வினைத்தொகை எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

சான்று: வீசுகென்றல், கொள்களிறு.

வினா: பண்புத்தொகை என்றால் என்ன?

விடை: நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் 'மை' என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

சான்று: செங்காந்தள், வட்டத்தொட்டி.

வினா: உவமைத்தொகை - சான்றுடன் விளக்குக.

விடை: உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் போல, ஒப்ப முதலான உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

சான்று: மலர்க்கை (மலர் போன்ற கை).

UNIT – 4

இயல் 4 – முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்

பலவுள் தெரிக (சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக)

வினா: உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது -

விடை: இ) திணை வழுவமைதி

வினா: இரவீந்திரநாத் தாகூர் _______ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை _______ மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

விடை: ஆ) வங்காள, ஆங்கில

வினா: படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

விடை: இ) அவர்

வினா: “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” - என்று கூறியவர் -

விடை: மணவை முஸ்தபா

வினா: ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்’ - இத்தொடர் _______ வழுவமைதிக்குச் சான்றாகும்.

விடை: கால வழுவமைதி

குறுவினா

வினா: “கழிந்த பெரும் கேள்வியினான்” – இவ்வடியில் குறிப்பிடப்படுபவர் யார்?

விடை: குசேல பாண்டியன்

வினா: மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

விடை:

  • மொழிபெயர்ப்புக் கல்வியினால் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்.
  • நாடு, இன, மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும்.

வினா: பகுபத உறுப்பிலக்கணம் தருக: அமர்ந்தான்.

விடை:

அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்

  • அமர் – பகுதி
  • த் – சந்தி (ந் ஆனது விகாரம்)
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

வினா: “என் அம்மை வந்தாள்” - இது எவ்வகை வழுவமைதி?

விடை: திணை வழுவமைதி. பசுவை உயர்திணையாகக் கருதி உவப்பின் காரணமாகக் கூறியது.

வினா: வழு என்றால் என்ன?

விடை: இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அது வழு எனப்படும்.

சிறுவினா

வினா: மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

விடை:

  • மன்னன் இடைக்காடனார் பாடிய பாடலைச் சுவைக்காமல் அவரை அவமதித்தான்.
  • இறைவனிடம் முறையிட்ட புலவருக்காக இறைவன் கோவிலை விட்டு நீங்கினான்.
  • மன்னன் தன் பிழையை உணர்ந்து, புலவரைப் பொன் இருக்கையில் அமர்த்தி, அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் சினத்தைத் தணித்துச் சிறப்புச் செய்தான்.

வினா: பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

விடை:

  • இன்று ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புத் தேவைப்படுகிறது.
  • விளம்பர மொழிக்கு இது அவசியம்.
  • திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேறு மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன.
  • இதனால் புதிய சிந்தனைகள் பரவுகின்றன.

வினா: வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை: வழுவமைதி ஐந்து வகைப்படும்.

  • திணை வழுவமைதி.
  • பால் வழுவமைதி.
  • இட வழுவமைதி.
  • கால வழுவமைதி.
  • மரபு வழுவமைதி.
நெடுவினா

வினா: மொழிபெயர்ப்புக் கல்வியின் இன்றியமையாமையை விவரித்து எழுதுக.

விடை:

  • மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது ஆகும்.
  • ஒரு நாட்டின் இலக்கிய வளம் மொழிபெயர்ப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
  • மொழிபெயர்ப்பின் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்.
  • இன்று ஊடகங்கள், விளம்பரத் துறை, திரைப்படம் எனப் பல துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புத் தேவைப்படுகிறது.
  • உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியங்களையும் நாம் அறிந்து கொள்ள இதுவே வழியாகும்.
இலக்கணப் பகுதி

வினா: பால் எத்தனை வகைப்படும்? உயர்திணைக்குரிய பால் பகுப்புகளை எழுதுக.

விடை: பால் ஐந்து வகைப்படும்.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்:

  • ஆண்பால்
  • பெண்பால்
  • பலர்பால்

வினா: மரபு வழுவமைதிக்கு ஒரு சான்று தருக.

விடை:

“கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்” - பாரதியார்.

குயில் கூவும் என்பதே மரபு. ஆனால் பாரதியார் கத்தும் என்று கூறியதை மரபு வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.

வினா: வழாநிலை என்றால் என்ன?

விடை: இலக்கணப் பிழைகள் இல்லாமல் பேசப்படுவதும் எழுதப்படுவதும் வழாநிலை எனப்படும்.

No comments:

Post a Comment